Wednesday, June 16, 2010

பூக்களின் வரிசை

குழந்தை தனக்குத் தெரிந்த
பூக்களின் பெயர்களைச்
சொல்லிக்கொண்டே வந்தது

நினைவில்
வரிசை தடுமாறியபோது
பூக்களோடு சேர்த்துக் கொண்டது
தன் பெயரையும்

சொல்லி முடித்த நிம்மதியில்
புன்னகையுடன் பார்த்தது

குழந்தையின் பெயரில்
சேர்ந்திருந்தது
எல்லா பூக்களின் வாசமும்

(கல்கி,08.08.2010 இதழில்
பிரசுரமானது)

12 comments:

  1. Hi Raja Chandrasekar,

    romba azhagaana kavithai... kuzhalinidhu... varisaiyil serkkalaam!

    vaazhththukkal...

    Ragavan

    ReplyDelete
  2. //குழந்தையின் பெயரில்
    சேர்ந்திருந்தது
    எல்லா பூக்களின் வாசமும்
    //

    கவிதையிலும் அதே வாசம்

    ReplyDelete
  3. //குழந்தையின் பெயரில்
    சேர்ந்திருந்தது
    எல்லா பூக்களின் வாசமும்//

    Nice lines Raajaa.

    ReplyDelete
  4. மிகச் சிறந்த உணர்வைத் தருகிறது இக்கவிதை.
    அற்புதம்!!!

    ReplyDelete
  5. நன்றி வேலு,கல்யாணி,ஸ்ரீவி சிவா.

    ReplyDelete
  6. kadavulae ! evvalavu alagaana feelingai tharugirathu intha otrai kavithai :)

    ReplyDelete
  7. உனக்கு மட்டும் கடவுள் கருப் பொருள் உற்பத்தியாகும் இடம் தனியாக படைத்தது அனுப்பிதது ஓர வஞ்சனைதானே?

    ReplyDelete
  8. நன்றி சொர்ணவள்ளி,சூர்யா,ராஜவம்சம்,
    அமுதா.

    ReplyDelete
  9. மிக அருமை நண்பரே.

    ReplyDelete
  10. அருமையர்ன அற்புதமான வரிகள்.

    ReplyDelete