Thursday, September 09, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

177-

என்னைத் திறந்து
வெளியேறிய கனவில்
கலந்திருந்தன
கையள்ளக்கூடிய
கவிதைகளும்

178-

அழவேண்டும்
போலிருக்கிறது
எனக்கும் தெரியாமல்

179-

ஒளி வீசும் வார்த்தைகளால்
இருளை எழுதிக்கொண்டிருந்தவனை
ஒரு இரவில் சந்தித்தேன்

நான் இரவிலிருந்தேன்
அவன் பகலில் இருந்தான்

5 comments:

  1. முதலிரண்டை விடவும் மூன்றாவது கவிதையில் வெகு நேரம் நிலைத்தன மனதின் கண்கள் ...

    ReplyDelete
  2. நல்ல கவிதைகள்

    மிக ரசித்தேன்

    ReplyDelete
  3. 178 அருமை... எனக்கு அப்படி தான் இருக்கு சில சமயம்..

    ReplyDelete
  4. நன்றி செந்தில்,வேலு,வினோ,அன்பரசன்.

    ReplyDelete