Monday, May 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

472-

கடைசி ஆசையையும்
புதைத்தேன்
சவப்பெட்டியில்
பூத்திருக்கும் மலர்கள்
உதிர நாளாகும்

473-

இல்லை என்பவர்களிடம்
இருக்காது
பெரிதாக எதுவும்

474-

முதல் வார்த்தைக்கு
தவமிருந்தேன்
மற்றவை
வார்த்தைகளின் தவங்கள்

475-

வழிகளில்
தொலைபவன் நான்

வழிகளை
தொலைப்பவன் அல்ல

476-

ஒரு நூல்கண்டால்
என்னைக் கட்டிப்போட்டேன்
பின் நூல்கண்டு
அறுபடாமல் வெளியேறினேன்
அறுபட்ட காயங்களில் நான்
அங்குமிங்குமாய்
கொஞ்சம்
சிதறி இருக்கலாம்

4 comments:

  1. கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அனுபவச் சித்தனின் படைப்புகள் அல்லவா?
    http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

    ReplyDelete
  2. //இல்லை என்பவர்களிடம்
    இருக்காது
    பெரிதாக எதுவும்//
    அபாரமான வரிகள்.நிஜமான கருத்து.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நன்றி குடந்தை அன்புமணி,இரசிகை,மால்குடி.
    சந்திப்போம்.

    ReplyDelete